வேலூர்=02
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மாங்காய் மண்டி பகுதியிலுள்ள நிக்கல்சன் கால்வாயில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் க.விஜய கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.