ஸ்ரீவில்லிபுத்தூர்
கலசலிங்கம் பல்கலையில் டிஆர்டிஓ நிதி உதவியுடன் கணிணி பொறியியல் துறை சார்பில் தேசிய நெட்வொர்க் 2 நாள் கருத்தரங்கு ” நெகஸ்ட் ஜெனரேசன் கிரிப்டோகிராபி இனோவேசன் டிரைவிங் பிய்ச்சர் நெட்வொர்க்” என்ற தலைப்பில் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வே. வாசுதேவன், டீன் முனைவர் பி. தீபலட்சுமி, துறைத்தலைவர் முனைவர் என். சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் முனைவர் வி. அனுசுயாதேவி வரவேற்புரையாற்றினார்.
ஆர் அண்ட் டி, இயக்குநர் முனைவர் எம். பள்ளிகொண்ட ராஜசேகரன் 2 நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியை பற்றி விவரித்தார்.
கோயம்புத்தூர், அமிர்தா பல்கலை, பேராசிரியர் முனைவர் டி. செந்தில்குமார் கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் 50 பேர் வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து வருகை புரிந்தனர்.
திருச்சி, என்ஐடி பேராசிரியர் முனைவர் குண்வார்சிங், காலிகட், என்ஐடி பேராசிரியர் முனைவர் வாசுதேவன் ஆகியோர் உரையாற்றி சான்றிதழ்களை வழங்கினர்.
பேராசிரியர்கள் டி.சாம் பிரதீப் ராஜ், கே. சுதேந்திரன், ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பேராசிரியர் என். சுந்தரேஸ்வரன் நன்றி கூறினார்.