அரியலூர்,அக்;29
அரியலூர் மாவட்டம் செந்துறை திரவுபதிய அம்மன் கோயில் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக திரவுபதி அம்மன் கோயில் தெருவில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி, அத்தெருவை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸார் மற்றும் ஊராட்சி அலுவலர்கள், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்