நாகர்கோயில் – ஆக. 08,
கன்னியாகுமரி மாவட்டம்
வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை
ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 9ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 10 தினங்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை
மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது இதனை குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார்.
பங்குத்தந்தை சேவியர் ராஜ் முன்னிலை வகிக்கிறார் வியாழக்கிழமை 6ம் திருவிழா முன்னிட்டு மாலை 6 மணிக்கு மாலை திருப்பலியும் அதனைத் தொடர்ந்து
அன்பு விருந்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது . 8ம் திருவிழா மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது இதற்கு
மாடத்தட்டு விளை பங்கு தந்தை மரிய ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார் , 9ம் திருவிழா சனிக்கிழமை காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது இதற்கு களிமார் பங்குத்தந்தை ஜான் ஆகஸ்டஸ் திருப்பலிக்கு தலைமை தாங்கி முதல் திரு விருந்து திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது இதற்கு சுங்கான்கடை புனித சவேரியார் மருத்துவமனை தாளாளர் சார்லஸ் விஜு
காஞ்சிரங்கோடு பங்குத்தந்தை பெனிட்டோ மறைஉரையாற்றுகிறார்
அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது.
பத்தாம் திருவிழா சிறப்பு திருப்பலி காலை 8 மணிக்கு இதற்கு குழித்துறை மறை மாவட்ட செயலர் பேரூர் தந்தை அந்தோணி முத்து திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார்
அருள்தந்தை மார்ட்டின் மறைவுரையாற்றுகிறார் அதனைத் தொடர்ந்து தேர்பவனியும் மாலை 6:00 மணிக்கு திருப்பலி அதனைத் தொடர்ந்து
கொடி இறக்கம் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது . திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சேவியர் ராஜ் பங்கு மக்கள் பங்கு பேரவை இணைந்து செய்து வருகிறார்கள்