சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏவால் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர். கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் ஆகியோருக்கு சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் யூ எஸ் டி சீனிவாசன், முன்னாள் எம்பி தனுஷ் குமார், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், மாவட்ட பொருளாளர் சரவணன், சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் கவுன்சிலர்கள் திமுக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.