வேலூர் மாவட்டம்
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி காந்தி நகரில் அண்ணல் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சமூக சேவை மக்கள் பாதுகாப்பு நல அமைப்பு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பேஸ்ட் பிரஷ், பள்ளி உபகரணங்கள், அகராதி, மற்றும் மக்களுக்கு நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மருத்துவர்கள் பங்கு பெறும் இலவச பொது மருத்துவ முகாம் தலைவர் எஸ். சுந்தரேசன் ,நிறுவனர் மற்றும் செயலாளர் பி.ஆர். கதிரவன் செயற்குழு உறுப்பினர்கள் ஏ கே. திராவிடன் எஸ். சிவசங்கரன் விசிக கட்சி 20வது வார்டு சாந்தாராம், மாவட்ட பொருளாளர் சி. சஜின் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். அமலாரீகன், அப்பு பால் உரிமையாளர் மக்கள் தொண்டு நிறுவனம். வி.எம்.பாலாஜி., ஸ்ரீ அமுதா ஆட்டோ பைனான்ஸ் ஜி பரத் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.