காரமடை, டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரி மற்றும் காரமடை, கலாம் விதைகள் அறக்கட்டளையின் சார்பாக டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 9-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு
பள்ளி மாணவர்களுக்கிடையேநடைபெற்ற பல்வேறு போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு ஆர்.வி.கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறை
மாணவி. ஷாலினிபிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர். சி.என்.ரூபா அவர்கள் தலைமையேற்று தலைமையுரையா ற்றினார். நரசிம்மநாயக்கன்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் திரு.முனியாண்டி அவர்கள், புகழ் தொலைக்காட்சியின் நிறுவனர் திரு. ஜான்சன் அவர்கள், கார்நிஷான் நிறுவனத்தில் பணிபுரியும் திரு.சந்தோஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் பேசிய உரையில், “புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு பெருமை சேர்த்தவர் டாக்டர்.அப்துல்கலாம். அவரின் நினைவிடம் நினைவுச்சின்னமாக விளங்குகின்றது. அவருடைய வாழ்க்கை வரலாற்றைப்படித்து இன்றைய மாணவர்கள் அவர் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும். அவருடைய நேர்மை,எளிமை, தேசப்பற்று, பழகும் தன்மை இவை அனைத்தையும் நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ வேண்டும். மாணவர்கள் தாங்கள் படிக்கின்ற காலத்தில் தங்கள் லட்சியத்தை தீர்மானிக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கி பயணித்து மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். அதிகமாக செல்போன் உபயோகிப்பதை தவிர்த்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் சுயநலமாக இல்லாமல் பொதுநலத்தோடு செயல்பட வேண்டும்” என்று பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினர். இந்நிகழ்வில் காரமடை, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 400 பேர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும், விதைப்பந்துகளும் வழங்கப்பட்டன. நிறைவாக கலாம் விதைகள் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. கனிஷ்குமரர் அவர்கள் நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், புகழ் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் மற்றும் கலாம் விதைகள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.