காஞ்சிபுரம் ஏப்ரல் 15 காஞ்சிபுரம் மாவட்டத்தில்
டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய ரயில்வே சாலையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு திமுக,அதிமுக, த.வெ.க., புரட்சி பாரதம்,பாஜக, விசிக, மக்கள் நீதி மையம்,அ.ம.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக திமுக மாவட்ட செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய செயலாளர் பி.எம். குமார், ஒன்றியப் பெருந்தலைவர் மலர் கொடி குமார், தலைமை செயற்கு உறுப்பினர். எம்.எஸ். சுகுமார், தலைமையில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதன்
பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ். ஆர்.சத்யா, ஒன்றிய செயலாளர் கும்பகோணம் ஜீவானந்தம், 47 வது வார்டு கவுன்சிலர் பிரேம் குமார் மற்றும் அதிமுக-வினர் ஓரிக்கை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர் அதன் பிறகு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர்.
தமிழக வெற்றிக்காக கட்சியினர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே தென்னரசு தலைமையில் 200.க்கும் மேற்பட்டோர் அக்கட் கட்சி கொடி ஏந்தி ஊர்வலமாக வந்து புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவை சிலைக்கு மாலை இட்டு மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சி தனசேகரன் தலைமையில் மாநகர செயலாளர் குட்டி ஒன்றிய செயலாளர்கள் காஞ்சிபுரம் பவலரசன், ஸ்ரீபெரும்புதூர் கோபி முன்னிலையில் இளைஞர்கள் சிலம்பம், சுருள்வால், சுற்றியும், மலர்களால் ஆன ரதத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப் படத்தை வைத்து அக்கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் பேரணையாக வந்து புரட்சியாளர் அம்பேத்கர் திருவுறை சிலைக்கு மாலை எட்டு மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் பாஜகவின் அதிசயம் ப.குமார், அமைப்பு பத்மநாபன் தேக்கு மண்டல தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி அம்பேத்கரின் புகழ் ஓங்குக என கோஷமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பார்வேந்தன், மாவட்ட செயலாளர் தி.வ.எழிலரசு, மாநகர மாவட்ட செயலாளர் மதியாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைகளில் அக்கட்சியின் சின்னமான பானையை கைகளில் ஏந்தி பேரணியாக வந்து புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி அம்பேத்கர் வாழ்க விசிக தலைவர் தொல் திருமாவளவன் வாழ்க என கோசமிட்டு அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.
மக்கள் நீதி மையம் சார்பில் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் அக்கட்சியினர் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட தலைவர் தலைமையில் மகளிர் அணி வரலட்சுமி மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.