சென்னை, ஜன -13 குளிர்கால மாரடைப்பு என்பது அரிதான ஒன்றாகும்.
இது டிசம்பர் மாதத்தில் பெரும்பாலும் ஏற்படுகிறது.
இதயத் தமனியில் அடைப்பின் காரணமாக, இதயத்தின் கீழ்ப்புற அறைகளை
பாதிக்கின்றது. இவ்வகை நோயளிகளை ‘கோல்டன் ஹவர் ” என்று 6 மணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்.
மருத்துவ மனைக்குள் அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து முழு சிகிச்சையை 90 நிமிடங்கள் என்று சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் காவேரி மருத்து மனையில் 49 நிமிடங்களில் இச்சிகிச்சையை அளித்து உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் அரவிந்தன் செல்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
இந்த அரிதான டிசம்பர் மாதத்தில் ஏற்படக்கூடிய மாரடைப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்க 90 நிமிடங்கள் கால தர நிர்ணம் செய்திருக்கிறது. வடபழனி காவேரி மருத்துவமனை டோர் டூ பலூன் சிகிச்சையை 49 நிமிடங்களில் செய்திருப்பது
கீழ் தசை திசுக்களை இறப்பை தவிர்க்க முடியும். மேலும்
இரு மடங்கு உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை த்தை கொள்ள வைக்கிறது. இச்சாதனை சர்வதேச அளவில் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும்
இந்த நோய் நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதை அறிவிப்பதில் காவேரி மருத்துவமனை வடபழனி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுபோன்ற 15 STEMI பாதிப்பு நேர்வுகளுக்கு இம்மருத்துவமனை சிகிச்சையளித்திருக்கிறது. அதாவது, சராசரியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு நோயாளிக்கு உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு நேர்வுக்கு சிகிச்சையளித்திருப்பது இத்துறையில் காவேரி மருத்துவமனையின் நற்பெயருக்கு வலு சேர்த்து நேர்த்தியான சான்றாக திகழ்கிறது.
கீழ்ப்புற சுவர் இதயத் தசைத்திசு இறப்பு, மாரடைப்பு நிகழ்வில் அதிகம் காணப்பட்ட வடிவமாக இருந்திருக்கிறது. இந்த பருவகால போக்கு, முந்தைய ஆண்டுகளிலும் இதேபோல இருந்தது அறியப்பட்டிருப்பதால், குளிர்கால மாதங்களின் போது IWMI நேர்வுகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது. இந்த காலத்தின்போது அதிகரித்திருக்கின்ற இடர்வாய்ப்பு இருப்பதை உணர்ந்திருக்கும் காவேரி மருத்துவமனை, நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள விளைவுகளுக்காக உரிய நேரத்தில் இடையீட்டு சிகிச்சையை வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு விழிப்புணர்வுடன் தயார்நிலையில் இருக்கிறது.
மருத்துவமனைக்குள் நோயாளி அனுமதிக்கப்படுவதிலிருந்து ஆஞ்சியோபிளாஸ்ட்டி இடையீட்டு சிகிச்சையை தொடங்குவதற்கு எடுக்கும் ” டோர் டூ பலூன் “என்னும் சிகிச்சை நேரத்தை உலகளவில் இதற்கான நேரம் 90 நிமிடங்களாக இருக்கின்ற நிலையில் அதைவிட கணிசமாக குறைந்த நேரமான வெறும் 49 நிமிடங்கள் என்ற சராசரி கால அளவே காவேரி மருத்துவமனையில் நேரமாக இருக்கிறது. இதன்மூலம் ஒரு புதிய தர அளவுகோலை வடபழனிகாவேரி மருத்துவமனை நிறுவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.