திருப்பத்தூர்:ஜன:11, திருப்பத்தூர் மாவட்ட மைய நூலகத்திற்கு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் மற்றும் வாசகர்களுக்கு கந்திகுப்பம் கிராமத்தினை சேர்ந்த சமூக ஆர்வலர் பிலிப் என்பவர் ரூபாய் 14 ஆயிரம் மதிப்புள்ள ஆர் ஓ குடிநீர் இயந்திரத்தினை அன்பளிப்பாக வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட நூலக அலுவலர் லூ.கிளமெண்ட் பொறுப்பு ஏற்ற நிலையில் திருப்பத்தூரில் இயங்கி வரும் மைய நூலகம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களுக்கு பல்வேறு திட்டப் பணிகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் நூலகத்தின் சிறப்பு அம்சங்களை கொண்டு சென்று போட்டித் தேர்வுகளுக்காக பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் வாசகர்களுக்கு தேவையான வசதிகளை அவ்வப்போது சிறப்பாக செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டுதலை பெற்று பல்வேறு நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை தன்னார்வலர்கள் மூலமாக செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட மைய நூலகத்திற்கு கந்திகுப்பம் கிராமத்தினை சேர்ந்த பிலிப் என்பவர் ரூபாய் 14 ஆயிரம் மதிப்புள்ள ஆர் ஓ குடிநீர் இயந்திரத்தை மாவட்ட நூலக அலுவலர் லூ.கிளமெண்ட் அவர்களிடம் வழங்கினார். இந்த ஆர் ஓ குடிநீர் இயந்திரத்தினை பயன்பாட்டிற்காக மாவட்ட மைய நூலகர் பிரேமா பெற்றுக் கொண்டார்.
உடன் நூலகர் செல்வராஜ் மற்றும் மாணவ, மாணவிகள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இருந்தனர்.