தஞ்சாவூர் பிப்.12.
தஞ்சாவூர் மாவட்டம் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் நாய்கள் கண்காட்சி எஸ் பி சி ஏ பசுமட வளாகத்தில் நடந்தது.
பாரம்பரிய நாய் இனங்களை பாதுகாக்கவும்,செல்லப்பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத் தவும், ஆதரவற்ற சுற்றி திரியும் நாய்களை தத்தெடுக்கவும், பிராணிகள் வதை கொடுமையில் சிக்காமல் இருக்கவும் விழிப்புணர் வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நாய் கண்காட்சி நடத்தப்பட்டது.
கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து, கண்காட்சியில் இடம் பெற்ற நாய்களை பார்வையிட்டார்.
கண்காட்சியில் சிம்பா , அலங்கு, டாபர்மேன், சிப்பிபாறை, கிரேட்டன், ஜெர்மன் ஷெப்பர்டு ,ராஜபாளை யம், அமெரிக்கன் பிக்புல், சிட்சு, பொமேரியன், கோல்டன் ரெட்ரிவர், ஈரோப்பியன் டாபர்மேன், ராட் லீலர் சைபீரியர் ஹஸ்கி உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்கள் இடம்பெற்றன. 160 நாய்கள் பங்கேற்றன.
சிறந்த நாட்டு மற்றும் அந்நிய வகை நாய்களுக்கு விருதுகளும் நாய்களின் புத்திசாலித்தனம் மட்டும் கட்டுப்பாட்டுத்திறன் பரிசோதிக்கப்பட்டு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறந்த நாய் பராமரிப்பு மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து வல்லுனர்களும் விளக்கம் அளித்தனர். முகாமில் பங்கேற்ற நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
கண்காட்சியில் இடம்பிடித்த அலங்கு என்கின்ற பெரிய நாய் வகை நாய் 10ம் நூற்றாண்டில் சோழர்கள் தென்னிந்திய நிலப்பரப்பை ஆண்ட காலத்தில் போர் படைகளில் அங்கம் வகித்த நாய் இனமாகும்.
ராஜராஜ சோழனின் போர்படை யில் எதிரி நாட்டுக்குதிரைப்படை யை தாக்க அலங்கு இன நாய்கள் பயன்படுத்தப்பட்டன .இந்த வகை நாய் தஞ்சாவூர் திருச்சி பூர்வீகமாகக் கொண்டது என கூறப்படுகிறது .தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சில பகுதிகளில் மட்டுமே இந்த வகை நாய் உள்ளதாக கூறப்படு கிறது.
இந்த கண்காட்சியில் 8 அலங்கு நாய்கள் இடம் பிடித்தன தமிழ் நாட்டைச் சேர்ந்த சிப்பிப்பாறை, கன்னி, கோப்பை இன நாய்களும், வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்களும் கலந்து கொண்டன. தமிழகத்திலேயே மிகப்பெரிய நாய் இனமாக கருதப்படும் கிரேட்டன் நாயும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன
இதில் அலங்கு, கிரேட்டன் போன்ற நாய்கள் பார்வையாளர் களை பெரிதும் கவர்ந்தது. இந்த நாய் கண்காட்சி ஏராளமானோர் கண்டு பிடித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கால்நடைத்துறை டாக்டர்கள் ,சங்க அலுவலர் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கி யராஜ், முகமது ரஃபி, விஜயலட்சுமி அருகானுயிர் காப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் பொறியாளர் முத்துக்குமார் பட்டய கணக்காளர் ராகவி ஆகியோர் செய்திருந்தனர்.