நாகர்கோவில் ஜன 24
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநிலஒருங்கிணைப்பாளரும்,கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான மரிய ஜெனிபர் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
அந்த மனுவில்,அகஸ்தீஸ்வரம் தாலுகா, மருங்கூர் வில்லேஜ்க்கு உட்பட்ட இராமனாதிச்சன்புதூர் ஆனது 17 ஆம் நூற்றாண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து கத்தோலிக்க ஆலயங்கள் நிறுவப்பட்டு கத்தோலிக்க மரபின்படி இராமனாதிச்சன்புதூர் ஊரில் மக்கள் குடியேறினார்கள்.
அக்காலம் தொட்டு இன்று வரை அப்பகுதி பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க மரபின்படியே தங்களின் வாழ்வியலை நடத்தி வருகிறார்கள். அப்பகுதி மக்கள் கத்தோலிக்க மரபு படி அமைக்கப்பட்ட தேவாலயங்களான இஞ்ஞாசியார் தேவாலயம், புனித ஆரோக்கியநாதர் தேவாலயம், மற்றும் குழந்தை இயேசு ஆலயம் ஆகியவற்றைகளை நிறுவி பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். ராமனாதிச்சன்புதூர் தென் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கிழக்கு எல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1858-ம் ஆண்டு காலகட்டங்களில் பிரிட்டிஷ் காரர்கள் ஆண்ட 1858-1 போது இந்தியாவை ஆண்டுகளில் பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட பொதுப்பணித்துறையினால் பொதுமக்களின் நலனுக்காகவும்,விவசாய மேம்பாட்டிற்காகவும் உருவாக்கப்பட்ட மருங்கூர் வில்லேஜ் க்குட்பட்ட சர்வே எண் 541 ஆனது 2021 லிருந்து அரசுக்கு சொந்தமான நீர்வள மேலாண்மை மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ராமனாதிச்சன்புதூர் ஊரின் நடுவே பேரல் குளம் தற்போது பெரியகுளம் என்று அழைக்கப்படும் விவசாயத்திற்கும் குளமானது அப்பகுதி பயனுள்ளதாக பொதுமக்களுக்கும் இருந்து வருகிறது .அப்பொதுமக்கள் கட்டி எழுப்பிய வீடுகளுக்கு பேரூராட்சி நிறுவனம் அனுமதி கொடுத்து வரியும் வசூலித்து வருகிறது. தமிழ்நாடு அரசு மின்சாரத்துறையும் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அரசு பல ஆண்டு காலமாக வருமானத்தை ஈட்டி வருகிறது. மேலும் பேரூராட்சி நிர்வாகத்தால் குடிநீர் இணைப்புகளும் கொடுக்கப்பட்டு அதன் மூலமாக வரி வசூலும் செய்து வருகிறது.
இவ்வாறு தங்கள் வாழ்வாதாரத்தை அப்பகுதி பொதுமக்கள் 2 நூறு ஆண்டு காலமாகவும், தலைமுறை தலைமுறையாக அவ்விடத்தில் வாழ்ந்த பின்பு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எதிரான சமூக நல்லிணக்கம் இல்லாத ஏதோ ஒரு நபரினால் கொடுக்கப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் தமிழக அரசு 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நீர்வளத் துறை 2021 -ன் அரசு ஆணையின்படி அப்பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது சமூக நீதிக்கு அநீதியாக உள்ளது.
பொது மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு துறைகளே பொதுமக்களை வாட்டி வதைப்பது கொடுங்கோன்மை ஆட்சியாகவும், அதிகாரமாகவும் தெரிகிறது. பல நூறு ஆண்டு காலமாக ஒரே பகுதியில் வசித்த பொது மக்களை திடீரென்று அப்புறப்படுத்துவது சொந்த நாட்டிலே அகதிகள் ஆக்கப்படும் கொடுமை ஆகும். இருப்பினும் அப்பகுதி பொதுமக்கள் அரசையோ அரசாங்கத்தையோ எதிர்க்காமல் எங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கூறுங்கள் என மடி ஏந்தி பிச்சை எடுப்பது போல் தங்களிடம் இந்த கோரிக்கையை வைக்கிறார்கள்.
ஆதலால் மருங்கூர் வில்லேஜ்குட்பட்ட நீர்வளத் துறைக்கு சொந்தமான பெரிய குளத்தின் கரையோரங்களில் குடியிருப்புகள் அமைத்து மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 8,9,10-ற்கு உட்பட்ட தற்போதைய வாக்காளர் பட்டியல் படி 1861 வாக்காளர்களில் 385 வாக்காளர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டும் ஸ்ரீ கிருஷ்ணாபுரம் மற்றும் ராமனாதிச்சன்புதூர் ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் நீர்வளத்துறைக்கு சொந்தமான இடங்களில் வசிக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கு முறையான பட்டா வழங்கவோ அல்லது அப்பகுதி பொதுமக்களுக்கு அப்பகுதிகளிலே முறையான வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்ய உத்தரவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு வழங்கும் போது மாவட்ட தலைவர் தீபக் சாலோமன், பொருளாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், செய்தி தொடர்பாளர் விஜேஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் இருந்தனர்.