போகலூர், டிச.20-
திமுக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி
இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மஞ்சூர் விலக்கில் போகலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஆர் குணசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
துணைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன் கலைச்செல்வி, கே கே கனகராஜ்
முன்னாள் பொது குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் தங்கராஜ் மாவட்ட பிரதிநிதி தனிக்கொடி A.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுப்பராயலு பரமக்குடி அறங்காவலர் குழுத் தலைவர் சிவ.வண்ணிச்செல்வன், கருத்தனேந்தல்
ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, மஞ்ச கொள்ளை மாரி , பொட்டி தட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், மஞ்சூர் காமராஜ் சாத்தையா வேலுச்சாமி, கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன் ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன், கோபி
மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் கிளைக் கழகப் பிரதிநிதிகள் அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்
கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.