கோவை மார்ச்: 24
கோவை மாவட்டம் ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் கணபதி பகுதி திமுக இளைஞரணி மற்றும் கே எம் சி ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் கணபதி பகுதி செயலாளர் கோவை லோகு தலைமையில்,31 வது வட்ட மாமன்ற உறுப்பினர் வைரமுருகன், கணபதி பகுதி அவை தலைவர் பழனிச்சாமி முன்னிலையில்கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கார்த்திக்,கோவை பாராளுமன்ற தொகுதி கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு முகாமினை துவக்கி வைத்தனர். உடன் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்,மாவட்டத் துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் தளபதிய இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் கல்பனா செந்தில், மாவட்ட பொருளாளர் எஸ் எம் பி முருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். 46வது வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார் துணை அமைப்பாளர் பாபு கணேஷ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.