தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் வைஷ்ணவி மகாலில் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட செயலாளர் ராஜா பேசுகையில் தமிழக முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனைப்படி பொது உறுப்பினர் கூட்டம் நடைபெறுகிறது தமிழகத்தில் கல்வியில் புரட்சி செய்தவர் காமராஜர் அவரைத் தொடர்ந்து முதல்வரான டாக்டர் கலைஞர் உயர்கல்வி நாயகனாகவே திகழ்ந்தார் அவருடைய முயற்சியால் தமிழக மாணவர்களுக்கு உயர்கல்வி மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய வழியில் பல கல்லூரிகள் துவக்கப்பட்டது வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாள் காஞ்சிபுரத்தில் பவள விழாவாக நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் நமது வடக்கு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பவள விழாவில் கலந்து கொள்ள வேண்டும் சினிமா நடிகர்கள் கொள்கை இல்லாமல் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கின்றனர் கொள்கை இல்லாதவர்கள் தமிழகத்தில் காலூன்ற முடியாது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல இன்னும் 25 ஆண்டுகளுக்கு மேல் திமுக தான் ஆட்சியில் இருக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் வரலாறு காணாத 75 ஆண்டு கால பவள விழாவை திமுக கண்டுள்ளது பவள விழாவை சிறப்பிக்கும் வகையில் திமுக தொண்டர்கள் வீடுகளில் திமுக கொடியேற்றி பொதுக்கூட்டங்கள் தெருமுனை கூட்டங்கள் நடத்திடவேண்டும் நான் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் திமுகவின் ஆணிவேர்களான கிளை திமுகவினர் தென்காசி வடக்கு மாவட்ட தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற உழைத்துள்ளனர் அனைவரும் ஒன்றிணைந்து திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார் ராஜா எம்எல்ஏ கூட்டத்தில் அவை தலைவர் பத்மநாபன் முன்னாள் அமைச்சர் சா தங்கவேலு யுஎஸ்டி சீனிவாசன் பரமகுரு மாநில மருத்துவர் அணி செண்பக விநாயகம் வர்த்தக அணி முத்துச்செல்வி சங்கரநாராயணர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வழக்கறிஞர் சண்முகையா மாவட்ட துணைச் செயலாளர் புனிதா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட பொருளாளர் சரவணன்நகர செயலாளர் பிரகாஷ் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் மற்றும் வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் கள் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா வழக்கறிஞர் முத்துராமலிங்கம் மாவட்ட இளைஞர் அணிமுகேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன் கார்த்தி ராஜ் ராஜராஜன் மாவட்ட மாணவர் அணி உதயகுமார் ஆதி திராவிடர் அணி கே எஸ் எஸ் மாரியப்பன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி வழக்கறிஞர் காசிராஜன் சோம செல்வா பாண்டியன் வாழைக்காய் துரை பாண்டியன் ஜெயக்குமார் வீரமணி ரஜினிகாந்த் வீராசாமி மற்றும் ஏராளமான மாவட்ட ஒன்றிய நகர கிளை திமுக உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics