மதுரை டிசம்பர் 20,
சென்னை அண்ணா அறிவாலயத்தில்
தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின் படி ஏற்கனவே நியமிக்கப்பட்ட தி.மு.க. பொறியாளர் அணி நிர்வாகிகள் பட்டியலை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மாற்றி அமைத்து தி.மு.க. பொறியாளர் அணி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். இதில் திமுக மாநில பொறியாளர் அணியில் மாநில துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டு கலைக்கார்த்திகேயன் பெறுப்பேற்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தியை நேரில் சென்று பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி அமைச்சரிடம் வாழ்த்துக்களை பெற்றார். உடன் சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன் மற்றும் 19 வார்டு மாமன்ற உறுப்பினர் பாபு மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.