குத்தாலத்தில் கோ.சி.மணியின் முழுவுருவ வெண்கல சிலையை திறந்து வைத்து திமுகவினர் கொண்டாட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேக்கிரிமங்கலம் கிராமத்தில் பிறந்தவர் மறைந்த திமுக மூத்த தலைவர் கோ.சி மணி. திமுக அரசில் மூன்று முறை அமைச்சராக பதவி வகித்த கோ.சி.மணி கடந்த 2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரின் நினைவாக குத்தாலம் திமுக ஒன்றிய அலுவலகத்தில் ஆறரை அடி உயரத்தில் கோ.சி.மணியின் முழுவுருவ வெண்கல சிலை புதிதாக நிர்மானம் செய்யப்பட்டது. கோ.சி.மணியின் 96-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான குத்தாலம் கல்யாணம் தலைமையில் திமுகவினர் குத்தாலம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு திமுக ஒன்றிய அலுவலகம் சென்றடைந்தனர். அங்கு கோ.சி.மணியின் உருவச் சிலையை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். தொடர்ந்து திமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கோ.சி.மணியின் குடும்பத்தார் மற்றும் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், குத்தாலம் ஒன்றிய தலைவர் மகேந்திரன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், குத்தாலம் ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், குமார.வைத்தியநாதன், ராஜா, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர்கள் மூவலூர் மூர்த்தி, இமயநாதன், இளையபெருமாள், முருகமணி, செம்பனார்கோயில் கோயில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அமிர்த விஜயகுமார், முகமது மாலிக், மற்றும் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பி எம் ஸ்ரீதர், குத்தாலம் பேரூர் கழக செயலாளர் சம்சுதீன், மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.