ஈரோடு, பிப். 2-
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்த லில் தி.மு.க வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டி யிடுகிறார். இவர் அமைச்சர் முத்துசாமி மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு வ ஊ சி பூங்கா மைதானத்தில் செயல்படும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் வேட்பாளர் சந்திரகுமார்
வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது வியாபாரி களிடம் கோரிக்கைளை கேட்டறிந்தார். தொடர்ந்து, வியாபாரிகளிடத்தில் வேட்பாளர் பேசுகையில் ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டில் மழைக்காலங்களில் நீர் வெளியேற வழியின்றி சேரும், சகதியுமாக மாறுவதை தடுக்க, வடிகால் வசதி ஏற்படுத்தி, கான்கிரீட் தளத்துடன் சுகா தாரமான குழலுடன் அமை க்கப்படும்.
மேலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும்.
பிரசாரத்தின்போது துணை மேயர் செல்வராஜ் மாவட்ட துணை செயலாளர் செல்லப்பொன்னி மனோகரன் சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.