நாகர்கோவில் ஆக 19
திமுக வும்,பா.ஜ.க வும் திரைமறைவில் கூட்டணி தான்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேதுபதி விளாசல்.
வாக்குக்காக அரசியல் களத்தில் எதிரெதிர் நிலைபாடுபோல் திமுக வும் பா.ஜ.க வும் இருந்தாலும்,இவர்கள் இருவரும் திரைமறைவில் கூட்டணி தான் என்பதை உணர்த்தும் விதமாக கருணாநிதியை புகழ்ந்த பிரதமர் மோடி கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் முக்கியமான தருணம் இது எனவும்,
இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி, தேசிய முன்னேற்றம் ஆகியவற்றில் எப்போதும் அதிக ஈடுபாடு கொண்ட ஒரு அரசியல் தலைவராக சிறந்து விளங்கியவர், சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய ஆழமான புரிதலை கொண்டிருந்தமையால் மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர் கலைஞர் கருணாநிதி என பெருமைப்படுத்தி பேசியிருந்தார்.
இவரின் இத்தகைய பேச்சு இவர்கள் இருவரும் திரைமறைவில் கூட்டணி தான் என்பதை நிரூபித்துள்ளது.
மேடைக்கு மேடை திமுக வை கடுமையாக விமர்சனம் செய்யும் பா.ஜ.மாநில தலைவர் அண்ணாமலை பிரதமரின் பேச்சுக்கு என்ன கருத்து கூறப்போகிறார். என
நாம் தமிழர் கட்சி நிர்வாகி
சேதுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.