கிருஷ்ணகிரி ஏப்ரல் 21:
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசியுடன், கழகப் பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் ஆணைக்கிணங்க, கழக தீவிர உறுப்பினர் சேர்த்தல் முகாம் இரண்டாம் கட்டமாக, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் போத்திநாயனபள்ளியில், நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய கழகப் பொருளாளர் ஜீவா (எ) கோவிந்தன் தலைமையில், நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமிற்க்கு, ஒன்றிய கழக செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். பெரியகோட்டப்பள்ளி ஊராட்சி, கள்ளுகுறி ஊராட்சி, நார்லபள்ளி ஊராட்சி, MCபள்ளி ஊராட்சி, பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு இணையதளம் வழியாக புதிய உறுப்பினர் கார்டை பெற்றுக் கொண்டனர். இதை பயன்படுத்தி தேமுதிகவினர் புதிய உறுப்பினர் கார்டு பெற்றுக் கொள்ளவும், பழைய கார்டை புதுப்பித்து கொள்ள வசதியாக முகாம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தெரிவித்துக் கொண்டார்.
இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை, மற்றும் பழைய உறுப்பினர் கார்டு புதுப்பித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரத்தின் சார்பில் நடைபெற்ற தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமில் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜ், மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் L.முருகன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு, நகர அவை தலைவர் கே.சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.வேலு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வர்ணாலயாஹரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.சி.கணக்கன், கேப்டன் மன்ற துணை செயலாளர் சந்திரன், காவேரி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் கே.பி.கோவிந்தராஜ், முருகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆயில்சங்கர், நகர துணைச் செயலாளர் மின்னல் மாது, ராஜசேகர், தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான தேமுதிக சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டனர்.