தென்தாமரைகுளம், டிச.15-
தே.மு.தி.க. சமூக வலைதள அணி தென் மண்டல பொறுப்பாளராக வழக்கறிஞர் சிவக்குமார் நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க.பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சமூக வலைதள அணி நிர்வாகிகள் மாவட்டம் வாரியாக மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் தலைமை கழக மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களுடன் இணைந்து கழக சமூக வலைதள அணி சம்பந்தமான பணிகளை மேற்கொள்வார்கள்.
இதில் கன்னியாகுமரி,நாகர்கோவில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,விருதுநகர், ராமநாதபுரம்,தஞ்சாவூர், திருவாரூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,கும்பகோணம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய சமூக வலைதள அணி தென்மண்டல பொறுப்பாளராக
குமரி மாவட்டத்தை சேர்ந்த தே. மு. தி. க சமூக வலைதள அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார் நாகப்பன் நியமிக்கப்படுகிறார்.இவருக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,
மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு ஆகியவற்றிற்கு சமூக வலைதள அணி நிர்வாகிகளை தேர்வு செய்து மண்டலப் பொருப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்
என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.