திருப்பூர் செப்டம்பர்: 28
தமிழக அரசின் கூட்டறவு நிறுவனமான கோ ஆப் டெக்ஸ் கடந்த 80 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ ஆப் டெக்ஸ் நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பெரும் உதவி புரிந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக திருப்பூர் புஷ்பா தியேட்டர் கல்லூரி சாலையில் உள்ள குமரன் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி 2024 ம் ஆண்டிற்க்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர். கிறிஸ்துராஜ்.குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.இந்த கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 60 ரூபாய் விற்பனை செய்துள்ளதாகவும் இந்த நடப்பு ஆண்டில் சுமார் 80 இலட்சம் இலக்கு வைத்து விற்பனை துவங்கி உள்ளதாகவும். மேலும் பொது மக்களுக்கான சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது.இந்த தள்ளுபடி விற்பனையானது 15-09-2024 முதல் 30-01-2015 வரை நடைமுறை படுத்தப்பட்டு அணைத்து ரகங்களுக்கு 30 சதவிகித தள்ளுபடி விற்பனையும் செய்யப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.