சங்கரன்கோவில். அக்.31.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சங்கரன் கோவில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை வகித்து தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம் , கருப்பசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் அலமேலு, செல்வராஜ், உமாசங்கர், ராஜாஆறுமுகம், புஷ்பம், ஷேக் முகம்மது, வேல்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் , ராமர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.