திருப்பத்தூர்:செப்:02, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனி சுப்பராயன் அவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாள், மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் நேச பிரியா, நேர்முக உதவியாளர்கள் ராஜன் ,ஜெயவேல் , பள்ளி துணை ஆய்வாளர்கள் தாமோதிரன், தனராஜ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இந்த நிகழ்வில் பணி நிறைவு பெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேசுகையில்: திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சிறப்பான மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அமைந்துள்ளனர். மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்த பல்வேறு திட்டங்களை சரியாக பயன்படுத்தி உள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றியவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என பலரும் ஒத்துழைப்பு செய்தனர். மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் மாணவ மாணவிகளுக்கு 25 இலட்சம் செலவில் நீட் பயிற்சி, இடைநின்ற மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி என பல்வேறு வகையில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். மாணவிகளின் தேர்வு முடிவுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்விழாவில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.