ராமநாதபுரம், ஆக.18-
ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு சங்கம், தமிழ்நாடு யோகாசன சங்கம், இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நான்காம் ஆண்டு மாவட்ட யோகாசன போட்டி மற்றும் மாநில போட்டிக்கான அணி தேர்வு நடத்தினர்.
ராமநாதபுரம் இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நான்காம் ஆண்டு மாவட்ட யோகாசன போட்டி மற்றும் மாநில போட்டிக்கான அணி தேர்வை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ராமநாதபுரம் யோகாசனம் மாவட்ட விளையாட்டு சங்கம் செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜான், பள்ளி முதல்வர் தாமஸ், ராமநாதபுரம் யோகாசனம் மாவட்ட விளையாட்டு சங்கம் தலைவர் லேனா செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணைத் தலைவர் நம்பூதியன், புவனேஸ்வரி, ராமலட்சுமி, அமுதா, வினிதா மணி, விஜய் செல்வி, சுகன்யா, கங்கா, சந்துரு, ஜெயந்தி, கல்பனா விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். யோகாசன போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் யோகாசன திறமையை வெளிப்படுத்தினர்.
சங்க பொறுப்பாளர் நன்றி கூறினார்.