ஈரோடு அக் 11
ஈரோட்டில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடந்தது . இதில் 24 அணிகள் பங்கேற்றன பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி ஈரோடு சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார் .
இதில் ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த குழுமிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் கலந்து கொண்டு விளையாடின . 14, 17 , 18 ஆகிய வயது உட்பட்டவர்களின் பிரிவுகளில் போட்டிகள் நடந்தது இதில் மொத்தம் .
24 அணிகள் மோதின . இதில் 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
முதலிடத்தையும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சித்தோடு சத்தியசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும் பிடித்தன .
இந்த அணிகள் மாநில அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. விழாவில் ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமோன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் . இதில் ஈரோடு சேலம் சிஎஸ்ஐ திரு மண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், பள்ளிக்கூட தாளாளர் பிராங்களின் ரிச்சர்டு பிரபு , தலைமையாசிரியர் அசோக்குமார் , உடற்கல்வி ஆசிரியர் காட்வின் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
இன்று மாலை மாணவிகளுக்கான எறிப்பந்து போட்டி நடக்கிறது.