நாகர்கோவில் நவ 26
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா துவக்கி வைத்து தெரிவிக்கையில்
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் வருடந்தோறும் டிசம்பர் 3 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு 12 வயது முதல் 14 வயது வரை (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஓட்டப்பந்தயம் -100 மீ மற்றும் நீளம் தாண்டுதல், 15 வயது முதல் 17 வாய்து வரை (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஓட்டப்பந்தயம் 200 மீட்டர் மற்றும் குண்டு எறிதல், 17 வயதிற்கு மேற்பட்டவர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஓட்டப்பந்தயம் -400 மீட்டர். தொடர் ஓட்டப்பந்தயம் 400 மீட்டர்.
பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கு 12 வயது முதல் 14 வயது வரை ஆண்கள் (பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர் நின்று நீளம் தாண்டுதல் (குறைவாக பார்வைத்திறன் முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்) நின்று நீளம் நாண்டுதல் (குறைவாக பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்) ஓட்டப்பந்தயம் 100மீ. 12 வயது முதல் 14 வயது வரை பெண்கள் (முற்றிலும் பாதிக்கப்பட்டவர்) ஓட்டப்பந்தயம் 50மீ. 15 வயது முதல் 17 வயது வரை (ஆண்கள் மற்றும் பெண்கள்) (முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்) – குண்டு எறிதல் – (குறைவாக பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்) ஓட்டப்பந்தயம் 100மீ. 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்கள் (முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்) வட்டுத் தட்டு எறிதல் – (குறைவாக பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்) ஓட்டப்பந்தயம் 200மீ. 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெண்கள் (முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்) வட்டுத்தட்டு எறிதல் (குறைவாக பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்) – ஓட்டப்பந்தயம் -100மீ.15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்புப் பள்ளிகள் ஆண்கள், பெண்கள்) (முற்றிலும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்- குண்டு எறிதல். கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள். சங்க உறுப்பினர்கள் (ஆண்கள். பெண்கள்) பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்) ஓட்டப்பந்தயம் -100$. (குறைவாக
கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான (நடக்கும் சக்தியற்றவர்கள்) போட்டிகள் (உதவி உபகரணங்களின் உதவியுடன்) (ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பொதுவாக தனித்தனியாக இப்போட்டி நடத்தப்பட வேண்டும்). 12 வயது முதல் 14 வயது வரை (ஆண்கள் மற்றும் பெண்கள்) காலிப்பர் மற்றும் கால்தாங்கி உதவியுடன் நடப்பவர்கள் நடைப்போட்டி -50மீ 15 வயது முதல் 17 வயது வரை (ஆண்கள்) மூன்று சக்கர வண்டி ஓட்டப்போட்டி 150மீ. 15 வயது முதல் 17 வயது வரை (பெண்கள்) மூன்று சக்கர வண்டி ஓட்டப்போட்டி 1008. 17 வயதிற்கு மேற்பட்டவர் (ஆண்கள்.பெண்கள்)-சக்கர நாற்காலி ஓட்டப்போட்டி -7566.
கைகள் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள் 12 வயது முதல் 14 வயது வரை (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஓட்டப்பந்தயம் 50மீ. 15 வயது முதல் 17 வயது வரை (ஆண்கள்) -ஓட்டப்பந்தயம் -1008. 15 வயது முதல் 17 வயது வரை (பெண்கள்) ஓட்டப்பந்தயம் -75மீ. 17 வயதிற்கு மேற்பட்டவர் (ஆண்கள்)-ஓட்டப்பந்தயம் 200 மீ 17 வயதிற்கு மேற்பட்டவர் (பெண்கள்) -ஓட்டப்பந்தயம் -100 மீ
அறிவுசார் குறையுடையோருக்கான போட்டிகள் 12 வயது முதல் 14 வயது வரை (ஆண்கள் மற்றும் பெண்கள்) நின்று நீளம் தாண்டுதல். 15 வயது முதல் 17 வயது வரை (ஆண்கள் பெண்கள்) ஓடி நீளம் தாண்டுதல் வயதிற்கு மேற்பட்டவர் (ஆண்கள்.பெண்கள்) ஓட்டப்பந்தயம் 100 மீ. மேலும் ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான போட்டிகள் (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொதுவான போட்டிகள் தனித்தனியாக இப்போட்டி நடத்தப்பட வேண்டும்) 12 வயது முதல் 14 வயது வரை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உருளைக்கிழங்கு சேகரித்தல். 15 வயது முதல் 17 வயது வரை (ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் பந்து எறிதல், 17 வயதிற்கு மேற்பட்டவர் (ஆண்கள், பெண்கள்) தடை தாண்டி ஓடுதல் போட்டிகளும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுவான போட்டி ஆண்கள் ஓட்டப்பந்தயம் 800மீ பெண்கள்ஓட்டப்பந்தயம் 400மீ ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்தி, அதில் வெற்றி பெற்று முதல் இடம் பிடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். இப்போட்டியில் சுமார் 25 பள்ளிகளில் இருந்து மொத்தம் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களுக்கு நிகராக இப்போட்டிகளில் வெற்றிப்பெற்று சாதிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். இவ்வாறு மாவட்ட அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாரதி, துறை சார்ந்த அலுவலர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.