அகஸ்தீஸ்வரத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி. பா.ஜ.செல்வ சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
தென்தாமரைகுளம்,ஜூன்.3-
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் அகஸ்தீஸ்வரம் ரைசிங் கிரிக்கெட் கிளப் மற்றும் சிவ பொன்னம்பலனார் கலைக்களம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி இன்றுதொடங்கியது .
போட்டியினை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க வர்த்தக பிரிவு ஒன்றியத் தலைவர் செல்வ சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
போட்டியில் முதல் பரிசு அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம்,சுழற்கோப்பையும்,இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.7 ஆயிரம் ரொக்கம்,சுழற் கோப்பையும்,மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கம்,சுழற் கோப்பையும்,நான்காம் பரிசு பெறும் அணிக்கு ரூ. 3 ஆயிரம் ரொக்க பணமும் சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்படுகிறது .