ஈரோடு நவ 8
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கில் சார்பில் ஈரோடு வி வி சி ஆர் நகர் குறிஞ்சி கலையரங்கில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடந்தது. இதில் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர். அறிவாற்றலை பெருக்கும் வகையில் நடந்த இந்த சதுரங்க போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு விளையாடினர் பல்வேறு பிரிவுகளாக இந்த போட்டி நடந்தது .இதில் அனைவரும் தங்களது திறமைகளை பயன்படுத்தி சதுரங்க காய்களை லாவகமாக நகர்த்தி விளையாடினர்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் தலைமையில் நடந்த இந்த போட்டியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாநில துணை செயலாளர் குறிஞ்சி சிவக்குமார் பகுதி செயலாளர் குறிஞ்சி தண்டபாணி ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு பொ ராமச்சந்திரன் வி. சி நடராஜன் மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் சேந்தபுகழன் வரவேற்றார்.