வேலூர்_23
வேலூர் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 55வது வார்டு எழில்நகர் விருப்பாட்சிபுரம் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உடனிருந்தார்.