மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சாமல்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சிகிச்சைப்பிரிவு, ஆண் மற்றும் பெண்கள் சிகிச்சைப் பிரிவு, கர்ப்பிணித் தாய்மார்கள் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, பல் சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் ஆகியவற்றை பார்வையிட்டு, தினசரி நோயாளிகளின் வருகை, நடப்பு மாதத்தில் குழந்தைகள் பிறப்பு, தாய்சேய் நலம் குறித்த தொடர் கண்காணிப்புகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களின் வருகை பதிவேடு, மருந்துகள் இருப்பு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பயன்படுத்தப்படாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு தேவையான பெட், வீல்சேர் உள்ளிட்ட பொருட்களுக்கு துறை சார்பாக கடிதம் வழங்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு இன்று சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், நாள்தோறும் உணவு தரமாகவும், சுவையாகவும் வழங்கப்படுவது குறித்தும், பாடத்திட்டங்கள் குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியரிடம் கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்து, நடப்பு கல்வியாண்டிற்கு மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்களை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, பாடத்திட்டங்களை நடத்த வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களை சுற்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின்போது, வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.கவின், மரு.பானுபிரியா மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடனிருந்தனர்.