முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் – திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுடன் நேரில் ஆய்வு
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் இரண்டாம் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபடுவதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் 2025 ஜனவரி மாதத்திற்கான முகாம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில்; நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், சொரக்குடி ஊராட்சியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளியால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீட்டினையும்,
குவளைக்கால் பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரம் குறித்து நியாய விலைக்கடை ஊழியரிடம் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, குவளைக்கால் பகுதியிலுள்ள மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும் மக்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்கள்
விசலூர் ஊராட்சி ஊரக குடியிருப்பு வீடுகள் பழுது நீக்க திட்டத்தின் கீழ் இரண்டு குடியிருப்பு வீடுகளில் பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளதனையும், ஆனைக்குப்பம் ஊராட்சி, மூலமங்கலம் கிராமத்தில் 15-வது நிதி குழு மான்யம் (கி.ஊ.) 2024-25ன் கீழ் ரூ. 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பழுது நீக்கம் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பொது விநியோக கட்டடத்தினையும், ஆனைக்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆனைக்குப்பம் அரசு கல்லூரி; மாணவியர் விடுதியில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி குறித்தும், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.10.01 இலட்சம் மதிப்பீட்டில் சமையற்கூடம் கட்டப்பட்டுவருவதையும நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இச்செய்தியாளர் பயணத்தில், அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.