தேனி, ஜன.26-
தேனி மாவட்டம்
குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைர் அவர்கள்
தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று, 79 பயனாளிகளுக்கு ரூ.3.78 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.01.2025) நடைபெற்ற குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து, மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு, காவல்துறை அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவித்தும், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், 79 பயனாளிகளுக்கு ரூ.3,78,15,919 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (26.01.2025) வழங்கினார்.
இவ்விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.1,01,800/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் 1 நபருக்கும், ரூ.16,199/- மதிப்பிலான ஸ்மார்ட்போன் 1 நபருக்கும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் வருடாந்திர பராமரிப்பு மானியமாக ரூ.25,000/- ஒரு நபருக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ரூ.15,57,800/- மதிப்பிலான வீட்டுமனைப்பட்டா 23 நபர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சார்பில் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பிலான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் சாவிகளும், தாட்கோ சார்பில் 90% மானியத்துடன் ரூ.2,08,00,000/- மதிப்பீட்டிலான வீடுகள் 20 நபர்களுக்கும், மாவட்ட தொழில்மையம் சார்பில் ரூ.13,79,250/- மதிப்பிலான சிசிடிவி கேமரா, யுபிஎஸ் மற்றும் மின்சாதன பொருட்கள் 4 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6690/- மதிப்பிலான தையல் இயந்திரம் 3 நபர்களுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் ரூ.1,49,000/- மதிப்பிலான விசைத்தெளிப்பான மற்றும் இயற்கை இடுபொருட்கள் 3 நபர்களுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.2,46,600/- மதிப்பீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு 4 நபர்களுக்கும், மீன்வளம் மற்றம் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.2,20,000/- மதிப்பீட்டில் அலங்கார மீன்கள்வளர்ப்பு மற்றும் நவீன மீன் விற்பனை அங்காடி மையம் அமைப்பதற்கு 2 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.84,00,000/- கடனுதவியும் என மொத்தம் 79 பயனாளிகளுக்கு ரூ.3,78,15,919/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 74 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், அதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நீதித்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சிகள் நிருவாகம், உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டுவளர்ச்சி, கருவூலம் மற்றும் கணக்குத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலம் மற்றம் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, போக்குவரத்துத் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை, மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை, கூட்டுறவுத்துறை பொதுப்பணித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 657 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, நெகிழி பயன்பாடு குறைப்பு பணிகளுக்காக சிறந்த நகராட்சிக்கான விருது தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கும், சிறந்த ஊராட்சி ஒன்றியத்திற்கான விருது க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கும், சிறந்த பேரூராட்சிக்கான விருது உத்தமபாளையம் பேரூராட்சிக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டமனூர், நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பம், நாடார் சரசுவதி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளி, வடபுதுப்பட்டி மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெள்ளையம்மாள்புரம், எரசக்கநாயக்கனூர், கோட்டூர் ஆகிய விடுதிகளை சேர்ந்த பள்ளி மாணவிகள் என மொத்தம் 280-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி அபிதா ஹனிப், பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா இ.கா.ப, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.முத்துமாதவன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி நிர்மலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி வளர்மதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி தாட்சாயணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி இந்திராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திரு.வெங்காடச்சலம், தாட்கோ மேலாளர் திருமதி சரளா, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.