நவ. 11
திருப்பூரில், தரமற்ற உணவு விற்பனை செய்த உணவு விடுதியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் தரமற்ற உணவு தயார் செய்து விற்பனை செய்வதாக வந்த பகாரை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தா.கிருஸ்துராஜ் ஆலோசனையின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர்.விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புதுறையினர் அந்த உணவு
வளாகத்தை ஆய்வு செய்தனர்..
உணவு விடுதி நடத்த தக்க அனுமதியுடன், அரசின் வழிகாட்டுதலின் பேரில், செயல்பட்டு வந்துள்ளது. நல்ல வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் சாப்பாட்டு மற்றும் சமையலறை நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு இருந்தது.
சமைத்த அரிசி சோதனை செய்யப்பட்டு நல்ல முறையில் வேகவைக்கப்பட்டுள்ளதா.. என அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
மேலும் தேசை, இட்லிகளை முழுவதுமாக வேகவைத்து விற்பனை செய்ய அறிவுறுத்தினர்.
உணவு வகைகளை கையாளுபவர்கள் ஹேர்நெட், ஏப்ரான் மற்றும் க்ளோ அணிய அறிவுறுத்தினர்.
பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர் முன்னிலயில் உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறும் அனைத்து அம்சங்களையும் கண்காணிக்க வேண்டும் என்றும்,
உணவு பொருட்கள் அறையினை நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு, மூல உணவு பொருட்களை சேமிக்க மூடியுடன் கூடிய தொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்புதுறையினர்
அறிவுறுத்தினர்.