திண்டுக்கல் ஜூலை :4
திண்டுக்கல் மாவட்ட ஒன்றியத்தின் சார்பாக
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின்
மாவட்ட செயற்குழு கூட்ட நிகழ்ச்சி
தானைத்தலைவர்
சிவஇளங்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திண்டுக்கல்
மாவட்ட தலைவர்
த.பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.
இச்செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்
சே.முகம்மதுரபிக் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர்
எஸ்.கார்த்திகேயவெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இச்செயற் குழுவில் கூட்டத்தில்
மாவட்டத் துணைத் தலைவர்கள்
பெ.பூமிபாலன்,
பொன்இளங்கோ,
எம்.கே.ரமேஷ்குமார்,
ச.சார்லஸ் சேசுராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர்
ஏ.முருகேசன் ,
மத்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.வீரராஜ்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்
முருகுபாண்டியன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர்
சௌ .சரண்ராஜ், இளைஞர் அணி
இணைச்செயலாளர்
மு.இசாக்மன்சூர்,
மாவட்ட இலக்கிய அணிஇலக்கிய அணி செயலாளர்
த.மணிகண்டன், இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜிகண்ணன், இணைச் செயலாளர்கள்
ஏ.சக்திதாஸ்,
பி.முத்துராமன், திண்டுக்கல் வட்டக்கிளை தலைவரும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.தண்டபாணி, வேடசந்தூர் வட்டக்கிளை துணை தலைவர் ப.மணிவேல் மற்றும் கண்ணன் ,
நத்தம் வட்டக்கிளை துணை தலைவர்
கே.பிரபாகரன், நிலக்கோட்டை வட்டக் கிளை நிர்வாகி எம்.முருகன், கொடைக்கானல்
வட்ட கிளை செயலாளர் கே.ஜெயபிரகாஷ்,
த.நா.பொதுசுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க மாநில துணைதலைவர் தே.மைக்கேல் ஆரோக்கிய தாஸ் ,ஒன்றிய மாநில இலக்கிய அணி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானங்களான தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும் எனவும்,
தமிழக அரசு நிதி பற்றாக்குறையினால் நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையினை மீண்டும் வழங்கிட வேண்டும் எனவும், தமிழக அரசு, அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதிய குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவைத் தொகையினை வழங்காமல் நிலுவையாகவே உள்ளதால், நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டுமாய் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறது என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இச்செயற்குழுவில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை துறை நிர்வாகப் பணியாளர் சங்கம் ,தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் ,தமிழ்நாடு பொதுநூலத்துறை அலுவலர் ஒன்றியம் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கம், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் நலச்சங்கம் ,
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம், தமிழ்நாடு ஆய்வக நுட்பனர் ஒன்றியம் ,தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் (குரூப் 2) சங்கம் , தமிழ்நாடு வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் சங்கம் , தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம், தமிழ்நாடு கருவல கணக்குதுறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி பணியாளர் சங்கம், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் . மாவட்ட செயற்குழுவின் முடிவில் துணைத் தலைவர்
பொன்.இளங்கோ நன்றி கூறினார்.