அகஸ்தீஸ்வரம் டிசம்பர் 11
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பகுதி சபா கூட்டம் 1-வது வார்டு இடையன்விளையில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் தலைமை வகித்தார் .செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் செல்வராஜ் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து உள்ளனர் .கூட்டத்தில் பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு அதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.