தேனி அக் 25:
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழர்களின் சிறப்பு பண்டிகையான தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் மாவட்ட அரசுத் துறை அனைத்து அதிகாரிகளும் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்