நாகர்கோவில் செப் 30
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட முட்டம் கடற்கரை, மாத்தூர் தொட்டிபாலம், உதயகிரி கோட்டை ஆகிய சுற்றுலா தலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்
கன்னியாகுமரி மாவட்டமானது அணைகள், கடற்கரை பகுதிகள், நீர் வீழ்ச்சிகள் உள்ளிட்ட அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டம் என்பதால் பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டிற்குட்பட்ட மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டவர்கள் அதிகளவில் வருகைப்புரிக்கின்றனர். வரும் சுற்றுலாப்பயணிகளின் அடிப்படை வசதிகள் சுற்றுலாத்துறையின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் முட்டம் கடற்கரை பகுதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, முட்டம் சுற்றுலாத்தலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலரிடம் கேட்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நாபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.37 கோடி மதிப்பில் பரளியாற்றின் குறுக்கே மாத்தூர் முதல் முதலார் வரை இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாத்தூர் தொட்டி பாலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு வருகைப்புரிந்த சுற்றுலாப்பயணிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து உதயகிரி கோட்டை சுற்றுலா தளத்தினை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.