இராமநாதபுரம் ஜூன் 01-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக எடுத்துக்காட்டாக நடைபெற்று வருகிறது ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா மே 10ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை வரும் வாகனங்களுக்கு ஆட்டோ,பைக் ரூ30 கார்,சுமோ ரூ50 சுற்றுலா பேருந்து சரக்கு வாகனத்திற்கு ரூ100 என ஏர்வாடி ஊராட்சி மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு திருவிழா ஏல குத்தகை 10 லட்சத்து 40 ஆயிரத்திற்கு விடப்பட்டது விதிகளை மீறி ஏர்வாடி ஊராட்சி நிர்வாத்தின் பெயரில் அதிகப்படியான கட்டணம் ரூ150 போலி பில் புக் அடித்து வசூலிக்கப்படுகிறது ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்,ஊராட்சி செயலர், தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தனர்
சந்தனக்கூடு திருவிழாவிற்கு வரும் வாகனங்களில் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் திரும்பி செல் இங்கு ஏன் வரவேண்டும் இப்படித்தான் வசூலி செய்வேன் என்று அடாவடித்தனம் செய்து வந்ததால்
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனுக்கு புகார்கள் வந்ததின் பேரில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் டோல்கேட் வசூல் செய்யும் இடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று நேரில் ஆய்வு செய்தார்.ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்கு வாகன ஓட்டிகளிடம் நேரடியாக வாகனங்கள் நிற்கும் இடத்திற்கு சென்று கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறதா என்று கேட்டார் வேன் டிரைவர் ஒருவர் ஏர்வாடி ஊராட்சி பெயரில் ரூ150 அச்சடிக்கப்பட்ட பில்ளை காட்டினார் டோல்கட்டில் அதிகமான கட்டணம் வசூல் செய்வதை கூறினார் நாங்கள் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் நீ ஏன் வருகிறாய் திரும்பி செல் என்று அடாவடித்தனமாக வசூல் செய்வது வருவதா கூறினார் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துணை வட்டாட்சியர் பரமசிவம் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவுக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வது உறுதி செய்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் குத்தகைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க ஏர்வாடி போலீசில் புகார் செய்தார் ஏர்வாடி திருவிழாவிற்கு வரக்கூடிய பக்தர்களும் வாகன டிரைவர்களும் தாசில்தாருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்தனர்.