கிருஷ்ணகிரி,ஜீன்.2- கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை சட்ட மன்ற தொகுதி மத்தூர் ஒன்றியம், மத்தூர் மாவட்ட அலுவலகத்தி சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சமூக சேவகர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்க மாவட்ட தலைவரும் மாவட்ட நிருபருமான எஸ். மதியழகன் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி ரோஜா பூ மாலை அணிவித்து கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து மத்தூர் ஒன்றிய தொழிலாளர் அணி பாசறை ஒன்றிய தலைவர் கணேசன் தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில்
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மாணிக்கபிரபு கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.மாவட்ட இணைத் தலைவர் இராஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தங்கதுரை, மாவட்ட வர்த்தக அணி ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம்,மாவட்ட வர்த்தக அமைப்பாளர் சின்னபையன், காமராஜர், தர்மலிங்கம், நந்தன், மணி, மகாராஜன், சங்கர்,மாவட்ட மகளிர் அணி சசிகலா, காவேரிப்பட்டணம் நகர செயலாளர் மஞ்சு,மாவட்ட தொழிற் சங்க மாவட்டதலைவர்கள், சமூக ஆர்வாலர் பிரகஷ் உள்படபலர் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.