திண்டுக்கல், டிச.22-
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் இருக். கின்றன. சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மேலும் மாநகராட்சியில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் என சுமார் 55 ஆயிரம் கட்டிடங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு 35 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதன்மூலம் சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக் கடை கட்டணம், தொழில் வரி, மாநகராட்சி கடைகளுக்கு வாடகை ஆகியவற்றால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக் கிறது. பொதுமக்கள் வரி செலுத்த வசதியாக மாநகராட்சியில் தனியாக வரி வசூல் மையம் செயல்படுகிறது. மேலும் வரு வாய் பிரிவு அலுவலர்கள் வார்டு வாரியாக வரி வசூலில் ஈடுபடுகின்றனர். எனினும் ரூ.45 கோடிக்கு மேல் வரி வசூல் நிலுவையில் இருக்கிறது.
இதையடுத்து மாநகராட்சியின் அனைத்து பிரிவு அலுவலர்கள், பணியாளர்களை கொண்ட 10-க்கும் மேற்பட்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு வரி வசூல் நடக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு வரி வசூல் ஆகாமல் மந்தமாகவே உள் ளது.இதனால் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளது. எனவே வருகிற 31-ந்தேதிக்குள் வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கவும் ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.