நாகர்கோவில் அக் 16
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டதில் விடுபட்டவர்கள் சுயமாக தங்களுடைய விவரங்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள தகவல்:- தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான “உரிமைகள்” திட்டம் மூலம் ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் கூடுதல் தகவல்களையும் தரவு தளத்தில் இடம் பெறாதவர்களின் விவரங்களையும் பிரத்யேகச் செயலி மூலம் சேகரித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் கணக்கெடுப்பில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் (அடையாள அட்டை பெற்றவர்கள்/அடையாள அட்டை பெறாதவர்கள் https:/tnrights.tnega.org/registration ) , என்ற இணைய முகவரியில் பெயர், கைப்பேசி எண், பிறந்த தேதி, முழு முகவரி போன்ற அடிப்படை விவரங்களை அளித்து சுயமாகப் பதிவு செய்யலாம். இணையதள முகவரியில் பதிவு செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை (UDID) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, கேட்டுக்கொண்டுள்ளார்.