ஆல் இந்தியா ஹேர் ட்யூட்டி அசோசியேஷன் சார்பில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
திண்டுக்கல்லில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆல் இந்தியா ஹேர் ட்யூட்டி அசோசியேஷன் சார்பில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆல் இந்தியா ஹேர் ட்யூட்டி அசோசியேஷனின் தலைவி சீனாமினி வருகை புரிந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அழகு கலையில் பல்வேறு வருகையில் சிறப்பாக செய்யப்பட்ட அழகு கலை நிபுணர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
அழகு கலை நிபுணர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலவாரிய அட்டை இன்சூரன் இலவசமாக வழங்கப் படுகிறது. இதேபோல் கடந்த 7-ம்தேதி அன்று சென்னையில் நடைபெற்ற தனிநபர் அழகுப்படுத்துதல், தனிநபர் ஆடை அலங்காரம் செய்தல் போட்டியில் கின்னஸ் ரெக்கார்ட் பண்ணியது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார்.
சீனாமினி ஆல் இந்தியா ஹேர் ட்யூட்டி அசோசியேஷன் தலைவி திண்டுக்கலில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் இதனை தொடர்ந்து சினிமா பாடலுக்கு நடனமாடிய அழகு கலை நிபுணர்கள் அகில இந்திய தலைவருக்கு மாலை அணிவித்து, மலர் கொத்து கொடுத்து, தலையில் மலர் கிரீடம் வைத்து தன்னை வரவேற்ற நிகழ்வைக் கண்டு அகில இந்திய தலைவி அன்பு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கு வந்த அழகு கலை நிபுணர்கள் கேக் வெட்டி தங்களது பதவியேற்ற நிகழ்வை கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஆடல் , பாடல் குத்தாட்டம் என நிகழ்ச்சியை சிறப்பாக பங்கேற்றனர்.