திண்டுக்கல்
மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சுபாஷினிக்கு தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது!
திண்டுக்கல்லில் வி.ஜி. கல்வி அறக்கட்டளை, பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் நினைவு விருதை மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சுபாஷினிக்கு ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன் வழங்கினார். உணவுத்துறை அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர் செந்தமிழ்செல்வன்,தி.மு.க., கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் வி.ஜி. கல்வி அறக்கட்டளை செயலாளர் மனிதநேயம் ஞானகுரு, பல்வேறு சிறப்பு விருதுகளைப் பெற்ற பெற்ற ஹாக்கி சங்க துணைத் தலைவர் லயன்.சகாய செல்வராஜ்,நெட் பால் சங்க மாவட்ட துணைத்தலைவர் சாதிக், ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்வின்போது மத்திய கூட்டுறவு வங்கியின் காவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வேஷ்டி சேலைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.