தேனி.
தேனி மாவட்டம் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் கடந்த 10 வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வருபவர் மணிமாலா நேற்று சின்னமனூர் சிவசக்தி நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மணிமாலாவை கணவர் மணிகண்டன் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் சோதனை செய்ததில் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் பால்பாண்டி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உடலை மீட்டு போலீசார் உடற்குறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக பணியாற்றிய மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தேனி மாவட்ட செய்தியாளர் அசோக்குமார்.