பூதப்பாண்டி – நவம்பர் -03-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள காட்டு புதுர் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் மனைவி ஆச்சியம்மாள் (54) இவர்களுக்கு திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஒரு வருடமாக சேர்ந்து வாழ்ந்ததாகவும் பின்னர் இவரது கணவர் இவரை பிரிந்து சென்று விட்டதாகவும் இவர் தனிமையில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்று காலையில் இவரை பார்க்க இவரது அண்ணன் பெருமாள் என்பவரது மகன் நிகேஷ் (23) ஆச்சியம்மாள் வீட்டிற்க்கு சென்று பார்க்கும் போது வீடு சாத்தி கிடந்தது வீட்டிலிருந்து எதோ துர்நாற்றம் வீசுவது போல் வரவே இவர் கதவை திறந்து பார்க்கும் போது இவரது அத்தை ஆச்சியம்மாள் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்கள் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடம் வந்து விசாரிக்கும் போது இறந்து கிடந்த ஆச்சியம்மாளுடைய அண்ணன் பெருமாள் நான் (31.10.24) இரண்டு தினங்களுக்கு முன்பு பிற்பகல் இங்கு வந்து சாப்பிட்டு தான் சென்றேன் என்றும் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்றும் கூறினார். ஆனால் அவருடைய நடவடிக்கையில் திருப்த்தி ஏற்படாத போலீசார் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அச்சியம்மாள் மரணம் இயற்க்கையா இல்லையா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.