கீழக்கரை மே 11
திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து ! கீழக்கரை தாசில்தார் விரைந்து வந்து உதவி !!
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கிச் சென்ற ஒன்றாம் நம்பர் அரசு பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் ஒன்று சைடு கொடுக்காமல் சென்றதால் அதனை முந்த முற்பட்ட அரசு பேருந்து சருக்கலில் நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து கவிழ்ந்த பேருந்தில் இடுபாடுகளுக்குள் சிக்கி இருந்த பொதுமக்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் இருக்காங்க காத்திராமல் வட்டாட்சியர் வாகனத்தில் ஏற்றி கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு காயம் பட்டவர்களிடம் நலம் விசாரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் செய்தார். இந்த விபத்து சம்பந்தமாக திருப்புல்லாணி காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.