கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்த தாளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பொன் பார்த்திபன் மனைவி சரண்யா டெலிகிராம் குரூப்பில் புதியதாக வந்த குறுந்தகவலை பார்த்து துபாயைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்டபோது குறைந்த விலைக்கு தன்னிடம் உள்ள USDT கிரிப்டோ கரன்சியை விற்பதாக ஆசை வார்த்தை கூறியதால் அதை நம்பி மேற்படி கார்த்திக் கூறிய இரண்டு வங்கிகளுக்கு தலா 10 லட்சம் வீதம் மொத்தம் 20 லட்சம் அனுப்பியுள்ளார் அதன்பின் கார்த்திகை பலமுறை தொடர்பு கொண்டு usdt கிரிப்டோ கரன்சியை அனுப்புமாறு கேட்டபோது அதற்கு அவர் பொய்யான உறுதி மொழிகளை கூறி usdt கிரிப்டோ கரன்சியை அனுப்பவில்லை என்று கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு தங்கதுரை அவர்களின் உத்தரவின் பெயரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சங்கு அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி கவிதா அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து துரித விசாரணை மேற்கொண்டதில் மனுதாரரின் பணமானது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரெனி என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. தனிப்படை விரைந்து கன்னியாகுமரிக்குச் சென்று ரெனி என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் தனது வங்கிக் கணக்கிற்கு இருபது லட்சம் ரூபாய் பணம் வந்ததை ஒப்புக்கொண்டார். மேற்படி பணம் Rs.20,00,00/- மீட்கப்பட்டு அதில் 15 லட்சம் இன்று 09.05.2024 காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனுதாரரிடம் ஒப்படைத்தார் மீதமுள்ள 5 லட்சம் ரூபாய் ரெனி வங்கி கணக்கில் முடக்கம் செய்யப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுரை வழங்கினார்
பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி மற்றும் செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்

Leave a comment