வேலூர்_21
வேலூர் மாவட்டம் ,தமிழக முதல்வரின் தேர்தல்கால வாக்குறுதியினை நிறைவேற்றிடக் கோரியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்தக் கோரியும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் வேலூர் காந்திநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் எஸ். சாம்ராஜ் ,ஜே. விமல் பாண்டியன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் சிஐடியு எஸ். பரசுராமன் துவக்க உரையாற்றினார். உடன் வேலூர் திட்ட செயலாளர் டி. ஜெகன் ,திட்ட பொருளாளர் எம். சின்னதுரை ,மாவட்ட செயலாளர் தாமோதரன், மாநில துணைத்தலைவர் எஸ். ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.