தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகராட்சி தலைவர் லட்சுமி நாட் டான் மாது தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். கமிஷனர் சேகர் வரவேற்புரை ஆற்றினார். வருவாய் ஆய்வாளர் மாதயன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். தருமபுரி நகரில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களும் தூர் வரவேண்டும். அவ்வாறு தூர்வாரப்படும் மண் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் .நகராட்சி பகுதியில் சொத்துவரி முறையாக விதிக்க வேண்டும். நகராட்சி பகுதியில் நிலுவை யில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தர்மபுரி நகர ஒட்டியுள்ள சனத் குமார் நதியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் அந்த நதியை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூர் வாருவதற்கு ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். என நகர மன்ற கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இலக்கிம்பட்டி, சோகத்தூர், ஏ.ஜெட்டிஅள்ளி மற்றும் தடங்கம் ஊராட்சிகளில் சாலை பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான திட்டம் மதிப்பீடு வரைபடம் ஆய்வு அறிக்கை மேற்கொள்ள ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் குடிநீர் திட்ட பணிகள், சாலை பணிகள் உள்ளிட்டரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் அறிவழகன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா, நகர மைப்பு அலுவலர் ஜெயவர்மன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics